நடிகர் விவேக்(vivek) சமீபத்தில் மாரடைப்பில் இறந்த செய்தி கேட்டு தமிழ்நாடே அதிர்ச்சியடைந்தது. அப்துல்கலாம் மறைவிற்கு பிறகு வாழும் அப்துல் கலாமாக அனைவராலும் பார்க்கப்பட்டவர்தான் நடிகர் விவேக்.
சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய நகைச்சுவைகளுக்கு சிரிக்க வேண்டும் அதே நேரத்தில் மக்கள் சிந்திக்கவும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அந்த வகையில் பல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார்.
அந்த வகையில் தற்போது கொரானா பரவால் அதிகமாக இருந்ததால் அதற்கான தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்டு மக்களையும் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.
இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்றாலும் கடந்த சில வருடங்களாகவே விவேக் தன்னுடைய மகன் இறந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறி வருகின்றனர். அதேபோல் விவேக் தன்னுடைய வட்டாரங்களில் இருப்பவர்களை சினிமாவில் உயர்த்திவிட தவறியதில்லை.
அந்த வகையில் அனைவருக்கும் பரிட்சயமானவர் செல் முருகன். கடந்த 25 வருஷமாக விவேக்கை மட்டுமே நம்பி அவருடன் பணியாற்றி வந்தார். விவேக் நடிக்கும் படங்களில் இவருக்கும் சின்ன சின்ன காமெடி காட்சிகளை வாங்கிக் கொடுத்து வந்தார்.
மேலும் விவேக்கின் காமெடிகளில் செல் முருகனின் பங்கு திரையில் மட்டும் அல்லாமல் திரைக்கு பின்னாலும் இருந்தது. அப்படி விவேக்கை மட்டுமே நம்பி இவ்வளவு நாள் சினிமாவில் இருந்த செல் முருகன் இனி என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைத்து பயப்படுவதாக சமீபத்தில் அவர் மனமுருக ஒரு பதிவை வெளியிட்டது பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.