தமிழ் சினிமாவில் பல காதல் காவியங்களைப் கொடுத்து ஏகப்பட்ட வெள்ளி விழாப் படங்களை கொடுத்தவர் தான் மைக் மோகன். இன்றும் இவரது படங்களின் பாடல்களை கேட்காத ரசிகர்களே கிடையாது.
ரஜினி, கமல் படங்களை விட மோகன் படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அப்போது எவ்வளவு பிரபலமாக இருந்தது. இளையராஜாவும் மோகன் படங்களுக்கு ஏகப்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
மோகன் தற்போது வரை நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருவதால்தான் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கிறார் என தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
80, 90 காலகட்டங்களில் பல சூப்பர் ஹிட் படங்களில் எழுத்தாளராக இருந்தவர்தான் ஆபாவாணன். ஆபாவாணன் படங்கள் என்றாலே அதற்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அப்படிப்பட்ட ஆபாவாணன் இயக்கத்தில் அருண்பாண்டியன் மற்றும் மோகன் இருவரும் நடித்துவந்த திரைப்படம் தான் ஒரு நண்பனின் கதை.
அதற்கு முன்னால் ஆபாவாணனின் ஒரு படம் நிதிச் சிக்கலில் சிக்கியதால் இந்த படம்தான் பாதியில் கைவிடப்பட்டது. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து சுட்ட பழம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இளம் ஹீரோவாக நடித்தது என்னமோ ஒரு நண்பனின் கதை படத்தில் தான்.
இவ்வளவு ஏன் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற முடிவில் விஜய்க்கு தந்தை கதாபாத்திரங்களில் நடிக்க வந்த வாய்ப்பை கூட மோகன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவரால் இப்பவும் ஹீரோவாக வெற்றிப்படங்கள் கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைக்கவில்லை.