தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் இருவருமே சமீபத்தில் நடிகர் விவேக் இறந்ததற்கு நேரில் வரவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அப்போது விஜய் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கும் தளபதி 65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியா நாட்டில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் நேற்றுதான் விஜய் சென்னை வந்துள்ளார்.
இன்று காலை விஜய் தன்னுடைய குடும்பத்தினருடன் நடிகர் விவேக் வீட்டிற்கு சென்றுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நேற்று வெளிநாட்டிலிருந்து வந்தவர் இன்று விவேக் வீட்டிற்கு சென்றது தளபதி ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது.
விஜய் மற்றும் விவேக் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் மற்றொரு முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித்துடனும் விவேக் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
ஏன் கடைசியாக வெளியான விஸ்வாசம் படத்தில் கூட விவேக் மற்றும் அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் அஜித் சென்னையிலிருந்தும் தற்போது வரை நடிகர் விவேக் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவிக்கவில்லை.
எப்போதும் ஏதாவது பிரச்சனை என்றால் அறிக்கை விடும் அஜித் விவேக் இறந்ததற்கு ஒரு அறிக்கை விட்டிருந்தால் கூட இவ்வளவு பெரிய பேச்சுக்கள் எழுந்திருக்காது. தற்போது விஜய் வெளிநாட்டில் இருந்து வந்த உடனேயே விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியது ஏன் அஜித் வரவில்லை என்று பேச்சுக்களை அதிகமாக கோலிவுட் வட்டாரங்களில் கிளப்பி விட்டுள்ளது.