தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கர்ணன் படத்தில் நடித்த நடிகைக்கு முன்னணி நடிகர் ஒருவர் பட வாய்ப்பை கொடுத்துள்ளது மற்ற நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு அந்த ராசி உண்டு. அதாவது ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த நடிகைக்கு தொடர்து தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைக் கொடுத்து விடுவார்கள்.
அந்த வகையில்தான் நயன்தாரா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால் போன்ற பல நடிகைகள் தமிழ் சினிமாவை கொஞ்ச காலம் ஆட்சி செய்தனர். ஆனால் தற்போது நயன்தாராவை தவிர மற்ற அனைவருமே தெலுங்கு பக்கம் சென்று விட்டனர் என்பதும் கூடுதல் தகவல்.
தற்போது அதே வழியில் கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா பட வாய்ப்பு ரஜிஷா விஜயனுக்கு கிடைத்துள்ளது. இத்தனைக்கும் இவர் கர்ணன் என்ற ஒற்றை படம்தான் நடித்திருக்கிறார்.
அதற்குள் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது சூர்யா கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். வழக்கறிஞர் வேடத்தில் சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் கூட இந்த படப்பிடிப்பில் இருந்து வெளிவந்தது தான்.
பழங்குடி மக்களுக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வருகிறாராம் சூர்யா. இதில் பழங்குடியினரில் ஒரு பெண்ணாக ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளார். சூர்யாவுக்கு ஜோடியா? இல்லையா? என்ற தகவல் வெளிவரவில்லை.
