39 வயது நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து துபாயைச் சேர்ந்த மிகப் பெரிய பணக்கார தொழிலதிபர் ஒருவரை உஷார் செய்து விட்டதாக அக்கட தேசத்திலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தவர் தான் அந்த நடிகை. பார்த்த உடனே பற்றிக்கொள்ளும் தோற்றத்தில் இருக்கும் அந்த நடிகை கவர்ச்சி காட்டவும் தயங்கியதில்லை. இவ்வளவு ஏன் நீச்சல் உடையில் நடிக்கவும் யோசித்தது இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஆறடியில் இருக்கும் அந்த நடிகை நீச்சல் உடையில் வந்தால் யோசித்துப் பாருங்கள். அப்பப்பா, அதில் சொக்கி விழுந்த ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள் மட்டுமா, உடன் நடித்த நடிகர்கள், தயாரிப்பாளர் என அந்த நடிகை மீது ஏக்கம் கொள்ளாதவர்களே கிடையாது.
இருந்தாலும் அம்மணி அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு தன்னுடைய நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். அதனைத் தொடர்ந்து சோலோ ஹீரோயினாக தன்னுடைய பாதையை மாற்ற அதிலும் அம்மணிக்கு வெற்றி தான் கிடைத்தது.
அப்படி ஒரு படத்திற்காக ரிஸ்க் எடுத்த போது தான் உடல் எடையை கூடி தற்போது வரை குறைக்க முடியாமல் தினமும் யோகா டயட் என மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நடிக்கவும் வாய்ப்பு வரவில்லை. கடந்த சில வருடங்களாக அக்கட தேசத்து நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் அந்த அலை ஓய்ந்தது.
ஆனால் தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என முடிவு செய்துள்ளாராம் அந்த நடிகை. அதற்காக துபாயில் மிகப்பெரிய வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பணக்கார தொழிலதிபர் ஒருவரை தன்னுடைய கணவராக தேர்ந்தெடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் தனி பிளைட் எடுத்துக் கொண்டு வானத்தில் ரொமான்ஸ் செய்வது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் எனவும் தன்னுடைய நட்பு வட்டாரங்களில் ஜாலியாக பேசி வருகிறாராம் அந்த நடிகை.