தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஒருவர் முருகதாஸ் அசிஸ்டன்ட் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு தர மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கும் செய்தி கொலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி நடிகர்கள் பலருக்கும் அவர்களுடைய கேரியர் வளர்ச்சி பெற உதவியாக இருந்தது ஏ ஆர் முருகதாஸின் படங்கள் தான் என்றால் அது மிகையாகாது. அஜித்துக்கு தீனா, சூர்யாவுக்கு கஜினி, ஏழாம் அறிவு, விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
இதில் விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தை தயாரித்தவர் தான் கலைப்புலி எஸ் தாணு. இந்த படம் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு முதல் 100 கோடி வசூல் படமாகவும் அமைந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முருகதாஸின் அசிஸ்டெண்ட் இயக்குனர்கள் 3 பேருக்கு அடுத்தடுத்து தன்னுடைய நிறுவனத்தில் பட வாய்ப்பு தருகிறேன் என கூறியிருந்தார் கலைப்புலி எஸ் தாணு.
அந்த வகையில் ஆனந்த் ஷங்கரை வைத்து விக்ரம் பிரபு நடிப்பில் அரிமா நம்பி, சந்தோஷ் என்பவரை வைத்து அதர்வா நடிப்பில் கணிதன் போன்றோருக்கும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் முருகதாஸின் முக்கிய அசிஸ்டன்ட் டைரக்டர் அஜய் ஞானமுத்துவுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காமல் யோசித்து வருகிறாராம்.
அஜய் ஞானமுத்து தற்போது இயக்கிவரும் கோப்ரா படப்பிடிப்பில் தயாரிப்பாளர்களுடன் பட்ஜெட் விஷயத்தில் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்ட விஷயத்தை கேள்விப்பட்ட கலைப்புலி எஸ் தாணு இவருக்கு மட்டும் வாய்ப்பு தருவதில் பலத்த யோசனையில் உள்ளாராம். அப்படியே கொடுத்தாலும் மிகப் பெரிய நடிகரை வைத்து தான் கொடுக்க வேண்டும், அப்போதுதான் ஒழுக்கமாக தன்னுடைய வேலையை பார்ப்பார் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் கூறியுள்ளார்.