சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40 படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
அதேபோல் ஞானவேல் என்ற இயக்குனர் இயக்கும் படமொன்றில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கலைபுலி எஸ் தாணு மற்றும் சூர்யா கூட்டணியில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் விரைவில் வரும் என படக்குழுவினர் அறிவித்தனர். வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வந்ததோடு சரி. அதன்பிறகு படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் கலைப்புலி எஸ் தாணு வெற்றி மாறனிடம் வாடிவாசல் படத்தின் பட்ஜெட்டை கேட்க, அவரும் 98 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு கொடுத்துள்ளாராம். அதனைத் தொடர்ந்து தாணுவும் தன்னுடைய வட்டாரங்களில் சூர்யாவின் சினிமா மார்க்கெட் எப்படி இருக்கிறது என்பதை விசாரித்து தற்போது வாடிவாசல் படத்தை தொடங்கலாமா? அல்லது பட்ஜெட்டை குறைக்க சொல்லலாமா? என்கிற யோசனையில் உள்ளாராம்.
பட்ஜெட் 100 கோடி என்றால் குறைந்தது சூர்யாவின் வாடிவாசல் படம் 200 கோடியாவது வசூல் செய்ய வேண்டும். ஆனால் அது நடக்குமா என்ற யோசனை தாணுவுக்கு பலமாக உள்ளதாம். இதில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் சம்பளம் மட்டுமே 48 கோடி என்பதும் கூடுதல் தகவல். இந்த முழு தகவலையும் வலைப்பேச்சு நண்பர்கள் கொடுத்தனர்.
