சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நோட்டாவை விட குறைவான வாக்கு பெற்ற மன்சூர் அலிகான்.. உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லனாக பலரையும் மிரட்டியவர் மன்சூர் அலிகான். இவரது நடிப்பில் வில்லத்தனமாக வெளியான படங்கள் அனைத்திலுமே இவர் பெரிதளவு ரசிகர்களை கவர்ந்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.

காலப் போக்கில் இவருக்கு அதன்பிறகு பெரிதளவு படவாய்ப்புகள் ஏதும் அமையாததால் வில்லத்தனத்தில் இருந்து விலகி காமெடி களத்தில் குதித்தார்.

அதிலும் பெரிய அளவு வெற்றி பெற முடியாமல் ஏதோ வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைக்க அதனை பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

mansoor alikhan
mansoor alikhan

தமிழகத்தில் பலருக்கும் எப்படியாவது தமிழகத்தை மீட்டு விட வேண்டும் எப்படியாவது தமிழகத்தை வெற்றி பாதைக்கு அழைத்து விட வேண்டுமென பலரும் நினைத்து வரும் நிலையில் மன்சூரலிகான் இதே நினைப்போடு இந்த ஆண்டு தேர்தலில் கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் பகுதியில் நின்றார்.

எப்போதுமே மக்களைப் பொறுத்தவரை நல்லவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள் நல்லது செய்யணும் என நினைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

அந்த மாதிரி தமிழகத்தில் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என நினைத்து போட்டியிட்ட மன்சூர் அலிகானுக்கு வெறும் 428 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஆனால் நோட்டாவிற்கு கிட்டத்தட்ட 1534 வாக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளன. இவ்வளவு குறைவாக மன்சூரலிகான் வாக்கு பெறுவதற்கு காரணம் அவர் தேர்தல் நாட்களுக்கு முன்பு காமெடியாக உலக சேட்டைகள் செய்தார்.

அதனால் மக்களும் இவரை காமெடியாக நினைத்துவிட்டு இவரை நம்பி ஓட்டு செலுத்தவில்லை நல்லது செய்ய வேண்டும் நினைக்கக்கூடிய எவரும் அரசியலுக்கு வரக்கூடாது என்பது ஒரு சில சமயங்களில் உறுதியாகி விடுகிறது.

Trending News