விஜய்யின் தளபதி 65 பட வாய்ப்பு கிடைக்கும் என கனவு கண்டு கொண்டிருந்த முருகதாஸை தளபதி கழட்டி விட்ட நிலையில் அடுத்ததாக இளம் நடிகருடன் சேர்ந்து ஹிட் படம் கொடுக்கப் போவதாக தன்னுடைய வட்டாரங்களில் கூறிவருகிறாராம் ஏ ஆர் முருகதாஸ்.
இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் அவர்களது கேரியர் உச்சத்திற்குச் செல்ல அடித்தளமாய் அமைந்தது ஏ ஆர் முருகதாஸின் படங்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது.
ஆனால் அப்பேர்ப்பட்ட முருகதாஸுக்கு தளபதி 65 படத்தில் வாய்ப்பு கொடுக்க விஜய் யோசித்தது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் முன்னணி நடிகர்களுக்கு பட வாய்ப்புக்காக வலை வீசிக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க முருகதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இவர் கூறிய கதை அல்லு அர்ஜுனுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதாகவும் விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றும் படத்தின் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.
முன்னதாக ஏ ஆர் முருகதாஸ் ஒரு கார்ட்டூன் படம் ஒன்றை பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்க இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அல்லு அர்ஜுன் படத்தில் முழு கவனத்தையும் செலுத்த உள்ளதாகவும், மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்தாக வேண்டும் எனவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்.