பேசாம பாகுபலியை மணிரத்தினத்துகிட்ட கொடுத்திருக்கலாம்? ராஜமௌலியை அசால்ட் பண்ணிய சம்பவம்

இரண்டு வருடங்களுக்கு மேல் மாங்கு மாங்கு என 400 கோடி பட்ஜெட்டில் எடுத்துக் கொடுத்த பாகுபலி படத்தைப் போன்ற இன்னொரு படத்தை மணிரத்னம் சீக்கிரமாக எடுத்துக் கொடுத்த பேச்சுதான் கோலிவுட்டில் அதிகமாகி உள்ளது.

கிளாசிக் படங்களை எடுப்பதில் வல்லவர் மணிரத்னம். அதைப்போல் மாஸ் கமர்சியல் படங்களை எடுப்பதில் கில்லாடி தான் ராஜமௌலி. இருவருக்குமான சினிமா பார்வை வேறுவிதமாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல் ராஜமௌலி என்னுடைய கேரியரில் இதுவரை ஒரு தோல்விப்படம் கூட கொடுக்காத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் மணிரத்னம் பிரம்மாண்டத்தை நம்பாமல் எதார்த்தமான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்குபவர்.

ஆனால் இந்த முறை நானும் பிரமாண்ட படங்களை எடுப்பதில் சளைத்தவன் இல்லை என்பதுபோல 450 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் எனும் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு போன்ற தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

முன்னதாக பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 500 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தி முடித்தாராம் ராஜமவுலி. ஆனால் 450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து வெறும் 190 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க உள்ளாராம்.

இதைக் கேள்விப்பட்ட பாகுபலி நிறுவனங்கள் பேசாமல் பாகுபலி படத்தையும் மணிரத்னத்திடம் கொடுத்திருந்தால் நமக்கு பொருளாதார ரீதியாக நிறைய மிச்சமாகியிருக்கும் என யோசிக்க வைத்துள்ளது இந்த செய்தி.

maniratnam-cinemapettai
maniratnam-cinemapettai