விஜய் சேதுபதி(vijay sethupathi) தற்போது இந்தியாவில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால் இவரது படங்கள் மற்ற மொழிகளிலும் நல்ல வியாபாரம் நடைபெற்று வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக தமிழில் துக்ளக் தர்பார், மாமனிதன், கடைசி விவசாயி, லாபம் போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவைகள் பெரும்பாலும் ஓடிடி தளங்களில் வெளியாகத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மலையாளத்திலும் இந்தியிலும் கூட விஜய் சேதுபதி படங்கள் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. அந்த வகையில் ஹிந்தியில் 2 படம், தெலுங்கில் 2 படம், மலையாளத்தில் ஒரு படம் என பிசியான நடிகராக வலம் வருகிறார்.
அதில் மலையாளத்தில் நித்யா மேனன் உடன் நடித்த 19(1)(a) என்ற படம் முழுவதும் தயாராகிய ரிலீசுக்கு ரெடியாக உள்ளன. இதற்கு முன்னால் மலையாளத்தில் மார்க்கோனி மாதா என்ற படத்தில் நடித்திருந்தாலும் அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
ஆனால் முதன் முதலில் அவர் முழு நீள படமாக நடித்தது இந்த படத்தில் தான். இந்த படத்தை மலையாள சினிமாவில் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாம்.
ஆனால் சமீபகாலமாக தியேட்டரில் வெளியாகும் படங்களை விட ஓடிடியில் வெளியாகும் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதும் மறுக்க முடியாத ஒன்று. விஜய் சேதுபதிக்கு நேரம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
