ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எம்ஜிஆரை கவர்ந்த பாக்யராஜின் திரைப்படம்..100 வாட்டிக்கு மேல் பார்த்த தரமான சம்பவம்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வளம் வந்தவர் பாக்யராஜ். இவரது இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் ரசிகர்களின் பேர் ஆதரவால் மிக பெரிய வெற்றி பெற்றன.

அப்படி இவர் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இப்படம் ரசிகர்களின்  பெரும் வெற்றி பெற்றது ,அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டது 25 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து  திரையரங்கில் ஓடியது.

mgr-tamil-cinema

இந்த படத்திற்காக பாக்யராஜ் ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இப்படம் வெளிவந்த காலத்தில் முந்தானை முடிச்சு என்ற படத்தின் பெயருக்கு மாபெரும் அரசியல் சர்ச்சை எழுந்தது.

munthanai-mudichu-thavakalai
munthanai-mudichu-thavakalai

அப்போது  எம்ஜிஆர் ஏன் இவ்வளவு பெரிய சர்ச்சை உருவானது என்பதற்காக இப்படத்தை பார்த்து உள்ளார். அதன் பிறகு முந்தானைமுடிச்சு என்ற பெயருக்கு பிரம்ம முடிச்சு மற்றும் அன்பு முடிச்சு என புரிந்த பிறகு இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்தப் படம் பிடித்துப் போக கிட்டத்தட்ட 100 வாட்டிக்கு மேல் பார்த்து ரசித்து உள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த அளவிற்கு பாக்கியராஜ்  நடிப்பு மற்றும் இயக்கத்தில் அசர வைத்துள்ளார். ஏவிஎம் சரவணன் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் என்பதால் கூட இருக்கலாம்.

Trending News