புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அஜித்திற்கும் பப்லுவிற்க்கும் ஏற்பட்ட தகராறு.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே சில படங்கள் நடித்தாலும் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகராக இருப்பார்கள் அப்படி ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகராக இருப்பவர் தான் பப்லு பிரித்திவிராஜ்.

வீட்டில் செல்லமாய் கூப்பிடுகிற பெயர்தான் பப்புலு அதுவே இவருக்கு பப்லு பிரித்திவிராஜ் மாறியது. அவள் வருவாளா என்ற படத்தில் இவரது நடிப்பில் பெரிதளவு ரசிகர்களை கவர்ந்ததால் அவருடைய சினிமா வாழ்க்கையில் இப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அதன்பிறகு சரிவர வாய்ப்புகள் வராததால் சீரியல் கவனம் செலுத்தி அரசி சீரியலில் திருநங்கையாக நடித்தார்.

ajith kumar babloo prithvi rajkumar
ajith kumar babloo prithvi rajkumar

அதன்பிறகு இவர் 10 க்கும் மேற்பட்ட நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இவர் பப்லு டீ என பெசன்ட்நகர் ஏரியாவில் ஒரு டீக்கடை வைத்துள்ளார்.

பப்லு பிரித்திவிராஜ் தங்கை மற்றும் அஜித் குமார் இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளார். அப்போது அஜித்குமார் பயங்கரம் ரேகிங் செய்வாராம். தலையில் சுவிங்கம் ஒட்டி விடுவது, இரண்டு சூ லேஸ்ய்யும் ஒன்றாக கட்டுவது போன்ற சேட்டைகள் செய்ததால் பப்லுவின் தங்கையை அவரது பெற்றோர் வேறொரு பள்ளியில் படிக்க வைத்துள்ளனர்.

பின்பு பல வருடங்கள் கழித்து நடிகர் சங்கத்தின் போது நடிகர் அஜீத் குமாரை பப்லு பிரித்திவிராஜ் பார்த்துள்ளார். அப்போது இதைப் பற்றி பேசிய போது தான்.

சேட்டை செய்த பையன் பெயர் அஜித்குமார் என்பதும் ஆனால் அது நம்ம தல அஜித்குமார் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரது தங்கைக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நம்ம தல அஜித் போய் காப்பாற்றுவாராம் இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Trending News