புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அவர் எப்போ கூப்பிடுவார்னு வெயிட் பண்றேன்.. இயக்குனரின் தம்பியை நினைத்து தவிக்கும் பிக்பாஸ் நடிகை

தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனராக வலம் வருபவரின் தம்பியை நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் மிகவும் வருத்தப்படுவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர்.

இவரெல்லாம் ஒரு ஹீரோவா என கிண்டலடிக்க பட்ட காலகட்டங்களில் அவருடைய முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் அந்த நடிகை. பருவத்திலேயே பார்ப்பதற்கு மப்பும் மந்தாரமுமாக இருப்பார்.

அந்தப் படம் வேறு ஒரு மாதிரியான படமாச்சா. இருவரது ரொமான்ஸில் தியேட்டரில் ஒரு மாதிரி ரசிகர்களை நெளியவிட்டது. அதன் பிறகு அந்த நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர் ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டார்.

ஆனால் அந்த நடிகைக்கு அப்படி எதுவுமே நடக்கவில்லை. சுமாரான படங்களில் நடித்ததால் வாய்ப்பு இல்லாமல் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அந்தக் கட்டத்தில் அவரது உடல்நிலையை வேறு தாறுமாறாக ஏறிவிட்டது.

அப்படி மோசமான தோற்றத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கேயும் உள்ளே ஒரு மாடலிங் நடிகருடன் கிசுகிசு ஏற்பட்டது. அவர் கொடுத்த அறிவுரையால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும்போது எடை குறைந்து செம பிகராக மாறிவிட்டார்.

இதனைப் பயன்படுத்தி மீண்டும் இயக்குனரின் தம்பியிடம் ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டாராம். ஆனால் அந்த நடிகரோ தற்போது உச்சத்தில் இருப்பதால் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டாராம். இதனால் எப்போது அந்த நடிகர் கூப்பிடுவார் என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறாராம் அந்த 36 வயது நடிகை.

Trending News