தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் முதன் முதலில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி வெளியாக போவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் அதன்பிறகு கொரானா பிரச்சனையில் சிக்கி தவித்த ஜகமே தந்திரம் திரைப்படம் மீண்டும் பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவானது. தனுஷூம் ஜகமே தந்திரம் படத்தின் தியேட்டர் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் படத்தின் தயாரிப்பாளரான ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் சத்தமில்லாமல் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு பல கோடிக்கு விற்று விட்டார்.
இதனால் டென்ஷனான தனுஷ் தற்போது வரை ஜகமே தந்திரம் படத்தின் டீசரை கூட தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிரவில்லை. இதிலிருந்தே அவர் தயாரிப்பாளர் மீது எவ்வளவு கடுப்பில் இருக்கிறார் என்பது தெரியவருகிறது.
இதற்கிடையில் ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரத்யேகமாக போட்டுக் காட்டியுள்ளார். படம் பார்த்த ரஜினிகாந்த், படம் மிரட்டலாக இருப்பதாகவும், கண்டிப்பாக இந்த படம் தனுஷுக்கு ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் கூறினாராம்.
இதுவரை வந்த கேங்க்ஸ்டர் படங்களில் இந்த படம் வேற லெவலில் உள்ளது எனவும் கார்த்திக் சுப்புராஜ் கட்டித்தழுவி பாராட்டினாராம். அண்ணாத்த படத்தை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் அழைத்து அடுத்த படத்திற்கான வாய்ப்பு கொடுக்கலாமே என யோசித்த நேரத்தில் ஜகமே தந்திரம் படத்தை போட்டு காட்டி அடுத்த பட வாய்ப்பையும் கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்து விட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஜகமே தந்திரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் கிட்டத்தட்ட 17 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.