தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். இவரது படம் வெளியானால் போதும் பல ரசிகர்களும் எந்த வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு படத்திற்கு சென்றுவிடுவார்கள். அந்த அளவிற்கு தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்.
அதற்கு காரணம் இவர் படங்களில் எப்போதுமே மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறி நடித்திருப்பார். அப்போதெல்லாம் எம்ஜிஆர் படத்தில் நடிக்க மாட்டோமா என ஏங்காத ஆட்களே கிடையாது.
இப்ப எல்லாம் ஒரு சில படங்களில் நடித்து வெற்றி பெற்று விட்டாலே பல நடிகர்கள் பந்தா காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அப்போது எம்ஜிஆர் பல ரசிகர்கள் வைத்து பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் எளிய மனிதராகவே இருந்துள்ளார்.

எம்ஜிஆர் படம் என்றாலே அனைத்து நடிகர்களும் நடிக்க ஒப்புக் கொள்வார்களாம். அதற்கு காரணம் எம்ஜிஆர் படத்தில் எப்போதுமே நடிப்பவர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் அதுமட்டுமன்றி விசேஷமான சாப்பாடுகளும் போடப்படுமாம்.
அதாவது எம்ஜிஆர் என்ன சாப்பாடு சாப்பிடுகிறாரோ அதே சாப்பாடு தான் அப்படத்தில் பணியாற்றிய நடன கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றிய சாதாரண ஊழியர்கள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு தான் வழங்கப்படும்.
எம்ஜிஆர் வீட்டில் எப்போதுமே அடுப்பு எரியும் அதற்கு காரணம் அவர் வீட்டில் தினந்தோறும் யாராவது ஒருவர் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்காக அவரது வீட்டில் தினந்தோறும் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். இந்த மாதிரி பல மனிதர்களை மதித்து நடந்துள்ளார் எம்ஜிஆர்.