தமிழ் சினிமாவில் தல அஜித் ரசிகர்கள் மிக அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த திரைப்படம் என்றால் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவரவிருந்த சோழர் கால வரலாற்று திரைப்படம் தான்.
இந்த படத்திற்கான கதையை எழுதி வைத்து கிட்டதட்ட ஏழு வருடங்களுக்கு மேலாக தல அஜித் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் விஷ்ணுவர்தன். ஆனால் இனிமேல் அந்த படம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
முதலில் ஆர்வமாக இருந்த தல அஜித் பின்னர் அந்த படத்தில் இருந்து விலகுவதற்கு காரணம் என்ன என்பதை கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
முதலில் இந்த படத்திற்கான கால்ஷீட் ஒரு வருடங்களுக்கு மேலாக தேவைப்பட்டுள்ளது. வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்று கொண்டிருந்த அஜித்துக்கு அந்த நேரத்தில் அவ்வளவு கால்சீட் கொடுக்க யோசித்தாராம்.
மேலும் வரலாற்று படம் என்பதால் தன்னுடைய உடல் எடையை ஏற்றி சிக்ஸ்பேக் வைக்க வேண்டிய நிபந்தனையும் போடப்பட்டுள்ளது. ஆனால் அஜித் மருத்துவரீதியாக தினமும் மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருந்ததால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனக் கூறிவிட்டாராம்.
எப்போது அஜித் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தாலும் நீண்டநாட்கள் அவரால் அதை மெயின்டெய்ன் செய்ய முடியவில்லை என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். அதுவும் ஆரம்பம் படத்தில் ஒரு பகுதியில் ஒல்லியாகவும், பிளாஷ்பேக் காட்சியில் குண்டாகவும் இருந்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இந்த காரணங்களே அஜித்தை தற்போது வரை அந்த படத்தில் நடிக்க வைக்காமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகின்றனர்.