ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

மனைவி , குழந்தையுடன் இருக்கும் துல்கர் சல்மான்.. இணையத்தில் வைரலாகும் செல்ல மகளின் புகைப்படம்

மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் அங்கு மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் மற்ற நடிகர்களைப் போல கதையை தேர்வு செய்யாமல் ஒவ்வொரு படமும் வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அவரது ரசிகர்களை படத்தின் மூலம் பிரம்மிக்க வைத்து வருகிறார்.

இவர் என்ன தான் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் இவரது அணுகுமுறையும் இவருடைய எதார்த்தமான பேச்சு ரசிகர்களை தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது.

dulquer salmaan
dulquer salmaan

தமிழ் சினிமாவில் துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் படம் பெரிய அளவிற்கு வசூல் பெறாவிட்டாலும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

துல்கர் சல்மானுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது துல்கர் சல்மான் அவரது மனை மூடி பேசவும்வி மற்றும் குழந்தையுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News