விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த பொங்கல் திருவிழாவன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த படம் உலகம் முழுவதும் 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் முதல் பின்னணி இசை வரை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றது. இன்று பல இளைஞர்களின் போன்களிலும் மாஸ்டர் ரிங்டொன் தான்.
ஆனால் மாஸ்டர் படத்திற்கு கலவையான விமர்சனங்களை கிடைத்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. விஜய்யின் கதாபாத்திரத்தை விட வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வலுவாக இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்தன.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் மாஸ்டர் படம் வெளியான தினங்களில் நல்ல வசூல் செய்துள்ளது. அந்த வகையில் இந்தியாவைத் தாண்டி அயல்நாட்டு மார்க்கெட்டில் விஜய்யின் மாஸ்டர் படம் முதல் நான்கு நாட்களில் 23 கோடி வசூல் செய்தது.
அதன் பிறகு வெளியான எந்தப்படமும் அந்த சாதனையை முறியடிக்க வில்லை. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு மே 13ம் தேதி பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் ராதே என்ற படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. இந்தப் படம் இந்தியாவில் நேரடியாக ஓடிடி இணையதளத்திலும், வெளிநாடுகளில் தியேட்டர்களிலும் வெளியானது.
படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் தற்போது வரை 13 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது. ராதே படத்திற்கும் மோசமான விமர்சனங்களே கிடைத்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இருந்தாலும் உலகமே கொண்டாடும் சல்மான் கான் படத்தை விஜய்யின் மாஸ்டர் படம் அசால்டாக ஓரம்கட்டி விட்டதே என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
