தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது கர்ணன். விமர்சனமும் வசூலும் சரிசமமாக இருந்தது.
ஆனால் மாரி செல்வராஜ் எடுக்கும் படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தொடர்ந்து தாக்கி எடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் இந்த படம் பெரிய அளவில் வசூல் மழை பொழிந்தது.
தனுஷை தாண்டி இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு சின்ன கதாபாத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அந்த வகையில் தனுஷின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் லால்.
மலையாள நடிகரான இவர் தமிழில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் கர்ணன் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் அதில் நீங்கள் பார்த்தது உண்மையில்லை என அவர் கூறியது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அது வேறு ஒன்றுமல்ல. கர்ணன் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசவில்லை எனவும், அதில் பேசியது ஒரு திருநெல்வேலிக்காரர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
படக்குழுவினர் எவ்வளவு முறை கேட்டும் நான் டப்பிங் பேச சம்மதிக்கவில்லை. அதற்கு காரணம் தன்னால் தமிழ் மொழியை அந்த வட்டாரங்கள் ஏற்ப சரியாக உச்சரிக்க முடியாது எனவும், நல்ல படத்தில் என்னால் குறை வந்துவிடக் கூடாது என்பதை உணர்ந்து இதை செய்ததாகவும் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.
