வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உலக அளவில் 3வது இடம் பிடித்த சூரரைப் போற்று.. சூர்யா படம் செய்த தரமான சம்பவம்

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தற்போது உலக அளவில் பிரமாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அஞ்சான் படத்தில் தொடங்கிய தோல்வி முகம் சூர்யாவுக்கு பல வருடங்களாக தொடர்ந்தது. இடைப்பட்ட சில வருடங்களில் சூர்யா நடித்த பல படங்கள் படுதோல்வியை சந்தித்து அவருடைய மார்க்கெட்டை பல மாநிலங்களில் கேள்விக்குறியாகி விட்டது.

ஆனால் முன்னணி நடிகர்கள் எவ்வளவு தோல்வி படம் கொடுத்தாலும் ஒரே ஒரு வெற்றி படம் அனைத்தையும் மாற்றி விடும் என்பதை நிரூபித்தது சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மொழி கடந்தும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது உலக அளவில் அதிக ரேட்டிங் பெற்ற படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது தமிழ் சினிமாவையே பெருமைப்பட வைத்துள்ளது.

ஐஎம்டிபி என்ற ரெடிங் தளத்தில் உலகளவில் நல்ல நல்ல படங்களுக்கு ரசிகர்கள் கருத்துத் தெரிவிப்பதன் அடிப்படையில் எந்த படம் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை கணக்கிட்டு பட்டியலிடுவார்கள்.

அந்த வகையில் உலக அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது சூரரைப் போற்று. சூரரைப் போற்று திரைப்படம் 10க்கு 9.1 ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. நீண்ட நாட்களாக ஒரு தரமான வெற்றிக்கு காத்துக் கொண்டிருந்த சூர்யா ரசிகர்களுக்கு சூரரைப் போற்று படம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதால் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

soorarai-pottru-imdb-rating
soorarai-pottru-imdb-rating

Trending News