வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்.. முதலில் அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் எந்த நடிகரும் நெருங்க முடியாத அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே அன்றைய காலத்தில் சக்கை போடு போட்டன.

எப்படி இன்றைய நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் விஜயகாந்துக்கு அப்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இவரது குணத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த விஜயகாந்த் அதன் பிறகு அரசியல் களத்தில் குதித்தார். முதலில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு அரசியல் வெற்றி பெறாவிட்டாலும் அதன்பிறகு எதிர்க்கட்சியாகும் ஆகும் அளவிற்கு மக்களிடம் ஆதரவைப் பெற்றார்.

சமீபகாலமாக விஜயகாந்து உடல்நிலை சரியில்லாமல் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவ்வப்போது இவரது உடல்நிலை குறித்து ஏதாவது ஒரு தகவல் வெளியாகும். தற்போது விஜயகாந்த் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த பலர் விஜயகாந்தின் உடல்நிலை பற்றி பல்வேறு விதமாக கூறிவருகின்றனர்.

அதனால் தேமுதிக தரப்பிலிருந்து விஜயகாந்த் அவர்களுக்கு வழக்கமான பரிசோதனை செய்வதற்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வேறு ஒன்றுமில்லை என கூறியுள்ளனர். சிகிச்சை முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

Trending News