தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே இவருடைய ரசிகர்களின் பேராதரவால் வெற்றி பெற்று வருகின்றன.
அஜித்துடன் எந்த நடிகர் நடித்தாலும் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அப்படி என்னை அறிந்தால் படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் அருண்விஜய்.
ஆனால் பல படங்களில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி கூறியுள்ளார். அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரிடமும் அஜித் இயல்பாக பேசுவார்.

எங்களுடன் வந்து தான் டீ குடிப்பார், சாப்டீங்களா என்று கேட்பார். அதுமட்டுமில்லாமல் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என கேட்டு அதை வாங்கியும் சாப்பிடும் அளவிற்கு மிகவும் எளிமையான மனிதர் என கூறியுள்ளார்.
குட்டி புலி என்ற படத்தின் மூலம் பெரிய வில்லனாக அறிமுகமானவர் ராஜசிம்மன். ஆனால் அதன் பிறகு இவருக்கு பெரிய அளவு வில்லன் கதாபாத்திரம் கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் அஜித்தை பற்றி வெளிப்படையாகச் சொன்ன இந்த விஷயம் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.