தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் படங்களுக்காகவே ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதோடு தனுஷுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது காமெடி நடிகர் சூரி மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரையும் வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் கௌதம் மேனன் அடுத்ததாக ஒரு படம் இயக்க உள்ளார்.
அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வெற்றிமாறனை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். பெரும்பாலும் அது நதிகளில் நீராடும் சூரியனே என்ற சிம்புவின் படமாகத்தான் இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.
இயக்குனராக கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த போது நடிகராக தன்னை மாற்றி தற்போது இயக்குனராக ஒரு வெற்றி கொடுக்க தடுமாறி கொண்டிருக்கிறார் கௌதம் மேனன்.
இதே நிலைமை வெற்றிமாறனுக்கு வந்துவிடுமா என்கிறது கோலிவுட் வட்டாரம். அருமையான கதைகளை தேடித்தேடி படமாக்கி வரும் வெற்றிமாறன் நடிகராக மாறிவிட்டால் அவருடைய இயக்கத்தின் தரம் குறைந்துவிடுமா? எனவும் பலர் யோசிக்கின்றனர்.
