தமிழக மக்கள் பலரும் கொரோனா சூழ்நிலையால் போடப்பட்டுள்ள ஊரடங்கை நினைத்து சோகத்தில் இருக்கின்றனர். இது சம்பந்தமாக பல சினிமா நடிகர்களும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மக்களை வீட்டிற்குள் இருக்கும் படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த கருத்தை போடும் போதெல்லாம் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் இடையில் சண்டை வந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக தினக்கூலிக்கு செல்லுபவர்கள் பிரபலங்களிடம் சமூக வலைதளங்களில் மல்லுக் கட்டி விடுகின்றனர்.
அவர்களது கோரிக்கையை நியாயம்தான். தினமும் வேலை செய்தால் தான் ஒரு வேளை சோறு கிடைக்கும் என இருந்தவர்களுக்கு திடீரென ஊரடங்கு போட்டு வீட்டிற்குள் அடைத்தால் சாப்பாட்டுக்கு என்ன பண்ண போகிறோம்? என்ற கவலை இருக்கும் தானே.
இந்நிலையில் ஊரடங்கு பற்றி நடிகர் பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாளை சிரிக்க சிறக்க இன்று உள்ளிருப்போம் என தன்னுடைய பாணியில் கொரோனா விழிப்புணர்வு பதிவு ஒன்றை பதிவிட்டார்.
இதைப்பார்த்து பொங்கிய ரசிகர் ஒருவர், உள்ளே இருந்தால் யார் உணவு தருவார்கள் என பதிலுக்கு கேட்டுள்ளார். அதற்கு அசராத பார்த்திபன், சரியான செருப்படி கேள்வி என அந்த நபருக்கு சப்போர்ட் செய்யும் வகையில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று உள்ளிருந்தால் நாளை உணவு உண்ண நாம் இருப்போம் எனவும், இல்லையென்றால் நம்மை மண் உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரானாவின் தீவிரம் இன்னும் பலருக்கும் புரியவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.