புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரக்சன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார் ரக்சன்.இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் டிவியிலேயே தங்கிவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்த ரக்ஷனுக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு மறுபடியும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் இரண்டாம் பாகத்தை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் வெற்றிக்கு போட்டியாளர்கள் ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் ரக்சனின் சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்குவதும் ஒரு காரணமாக அமைந்தது.

vj rakshan sister
vj rakshan sister

பல வருடங்களாக ரக்ஷன் தனக்கு திருமணமானதை வெளியே கூறாமல் ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் இணையதளத்தில் சரமாரியாக சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் வரத்தொடங்கின. அதனால் வேறு வழியின்றி தனக்கு திருமணமானதை வெளிப்படையாகக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது ரக்சன் அவரது அக்காவுடன் சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தில் இருவரும் அழகாக இருப்பதாக கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.

Trending News