சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஜகமே தந்திரம் வேற லெவல் படம்.. புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை துவங்கி விட்டனர்.

மதுரையில் புரோட்டா கடை வைத்திருக்கும் நபர் எப்படி உலக டான் ஆகிறார் என்பது தான் கதை என்கிறார்கள் ஜகமே தந்திரம் வட்டாரங்கள். ஆனால் படம் வேறு விதமாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பலரும் ஜகமே தந்திரம் படத்தைப்பற்றி புகழ்ந்து தள்ள ஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக ஒரு படம் வெளியாகும் போது அதைப் பற்றி பேசுவது சகஜம் தான்.

ஆனால் ஜகமே தந்திரம் படத்தில் நடித்த வெளிநாட்டு கலைஞர்களும் ஜகமே தந்திரம் படத்தை புகழ்ந்து பாராட்டி கொண்டிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும் தனுஷ் தற்போது உலகமே கவனிக்கப்படும் நடிகராக வலம் வருவதால் ஜகமே தந்திரம் படம் 17 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ.

ஜகமே தந்திரம் படம் வேற லெவலில் வந்திருப்பதாகவும், கண்டிப்பாக இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்திய மக்களையும் இந்திய கலாச்சாரங்களையும் மிகவும் விரும்புவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

jagame-thandhiram-cinemapettai
jagame-thandhiram-cinemapettai

Trending News