பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் செந்திகுமாரி.இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது ஒரு பையனுக்கு அம்மாவாக நடித்த இவரது நடிப்பை பார்த்து திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இவ்வளவு ஏன் இப்படத்திற்காக விஜய் டிவி விருது கூட இவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்பிறகு ஓஸ்தி, மெர்சல் மற்றும் கோலிசோடா ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் தெரியக் கூடிய அளவிற்கு பிரபலமானார். இருந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமாவில் பெரிய பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.
அதனால் சின்னத்திரைக்கு வந்தார் முதலில் கனா காணும் காலங்கள் தொடரில் டீச்சராக நடித்திருந்தார். ஆனால் பெரிய அளவில் இவர் கவனிக்கப்படவில்லை. பின்பு விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் தெய்வானை எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலிலும், மேலும் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலிலும் நடித்து வருகிறார்.
தற்போது இவருக்கு சீரியல்களிலும் சரியான வாய்ப்புகள் வராமல் இருப்பதால் இனிமேல் கவர்ச்சி காட்ட முடிவெடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடைய வயதிற்கு இணையாக இருக்கும் அனைத்து நடிகைகளிடமும் உங்களுக்கு மட்டும் பட வாய்ப்பு வருகிறது எனக்கு மட்டும் ஏன் வரவில்லை எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் சினிமாவைப் பொருத்தவரை கவர்ச்சி காட்டுவதற்கு வயது முக்கியமில்லை. அதனால் கவர்ச்சி காட்டத் தொடங்கினால் கண்டிப்பாக ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை அனைத்து படங்களும் கொடுத்து விடுவார்கள் என கூறியுள்ளனர். அதனால் செந்தில்குமாரி கவர்ச்சி காட்ட முடிவு எடுத்துள்ளார்.