ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சன்னி லியோன் வீட்டிற்கு பக்கத்துல 30 கோடிக்கு வீடு வாங்கிய பிரபலம்.. விலாசம் கேட்டு நச்சரிக்கும் நெட்டிசன்கள்!

பாலிவுட் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக இருப்பவர். தற்போது சன்னி லியோன் வீட்டிற்கு பக்கத்து வீடு வாங்கிய சம்பவம் தான் பாலிவுட் சினிமாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

பாலிவுட் சினிமாவை தூக்கிவைத்துக் கொண்டாடக் கூடிய ஒரு நடிகர் என்றால் அது அமிதாப் பச்சன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இவரது சம்பளமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மும்பையில் ஏற்கனவே ஏகப்பட்ட வீடுகள் வைத்திருக்கும் அமிதாபச்சன் தற்போது புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார். பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அட்லாண்டிஸ் நிறுவனம் கட்டி வரும் இந்த சொகுசு வீட்டை 27 மற்றும் 28 மாடியை முழுவதுமாக வாங்கியுள்ளார் அமிதாபச்சன். இந்த வீடு மொத்த விலை 30 கோடி ரூபாய்.

amitabh bachchan
amitabh bachchan

இந்தஅப்பார்ட்மெண்டில் தான் ஆனந்த் எல் ராய் சமீபத்தில் வீடு வாங்கினார். அதேபோல் சன்னி லியோன் கடந்த மாதம் 12வது மாடியை 16 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார். தற்போது சன்னி லியோன் இருக்கும் அப்பார்ட்மென்டில் அமிதாப்பச்சன் வீடு வாங்கி உள்ளதால் பிரபலங்கள் பலரும் அமிதாப்பச்சன்டம் உங்க வீட்டு அட்ரஸ் கொடுக்குமாறு கேட்டு வருவதாக பாலிவுட் சினிமாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமில்லாமல் இந்த அப்பார்ட்மெண்டில் உள்ள வேலைகள் முடிவடைந்தவுடன் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் அனைவரும் இந்த புதிய வீட்டிற்கு குடியேறி விடுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Trending News