ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சினிமா வாய்ப்பு தருவதாக பா**யல் தொல்லை.. அடுக்கடுக்காக குவியும் குற்றச்சாட்டு

சென்னையில் உள்ள பிரபலமான பிஎஸ்பிபி பள்ளி நிறுவனத்தின் மீது தற்போது தொடர்ந்து பா**ல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் தான்.

ராஜகோபாலன் மாணவிகளுக்கு பா**ல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிகள் செயல்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

அப்போது ஆசிரியர் அரை நிர்வாணமாக துண்டை மட்டும் கட்டிக்கொண்டு மாணவிகளிடம் ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பது மற்றும் இரவு நேரங்களில் ஆபாசமான மெசேஜ்கள் செய்வது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த போதும் இதனை பெரிதளவு கண்டு கொள்ளாததால் கோபம் அடைந்த மாணவிகள் வெளிப்படையாகவே கூறி விட்டனர்.

psbb-1
psbb-1

தற்போது இந்த ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சில மாணவிகள் தங்களுக்குள் இருக்கும் சினிமா ஆசையை பார்த்துவிட்டு ஆசிரியர்கள் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பா**ல் சீண்டல்கள் செய்ததாக கூறியுள்ளனர்.

தற்போது ஒரே பள்ளியில் இந்த மாதிரி தொடர் சம்பவங்கள் நடந்துள்ளதால் பல்வேறு தரப்பினரும் தங்களது கோபங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Trending News