ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் யோகி பாபு அழகான ஆண்மகன் என்று சொல்லியிருந்தால் அனைவரும் அடிக்க வந்திருப்பார்கள். அதற்கு காரணம் அவர் அப்போது பிரபலமாக இல்லை.
இவ்வளவு ஏன் யோகி பாபு பிரபல காமெடி நடிகராக வலம் வருவதற்கு முன்னர் அவர்கூட சேர்ந்து நடிக்கவே பல நடிகர்கள் யோசித்தனர் என்பதை அவரே பல பேட்டிகளில் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
ஆனால் தற்போது யோகிபாபு தன்னுடைய தனித் திறமையால் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராகவும் அதே நேரத்தில் ஒரு நாளைக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருகிறார்.
ஒரு காலத்தில் யோகி பாபு உடன் நடிக்க யோசித்த நடிகர்களே தற்போது அவரது கால்ஷீட் வேண்டும் என அடம்பிடித்து காத்திருந்து நடிக்கின்றனர். நடிகர்களே இப்படி என்றால் நடிகைகளை சொல்லவா வேண்டும்.
அப்படியிருந்தும் தமிழ் சினிமாவில் அம்மா என்றால் இந்த நடிகைதான் என்கிற அளவுக்கு தொடர்ந்து எல்லா நடிகர்களுக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் யோகி பாபு தான் என்னுடைய டெடிபியர் என குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய குழந்தைத்தனமும், ரசிக்க வைக்கும் பேச்சு திறமையும் தனக்கு பிடிக்கும் எனவும், அவரை ஒரு டெடிபியர் போல் கூடவே வைத்துக் கொள்ளலாம் அழகாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். யோகி பாபுவை அசிங்கப்படுத்திய பலருக்கும் சரண்யா பொன்வண்ணன் கொடுத்த கருத்து கண்டிப்பாக உறுத்தியிருக்கும்.
