புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குடும்ப குத்துவிளக்கு போதும்.. இனி கும்மி அடிக்க வேண்டியதுதான்.. களமிறங்கிய இளம் நடிகை

தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே பாவாடை தாவணி என குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அந்த இளம் நடிகை. இதுவரை அவர் பெரும்பாலும் கவர்ச்சி காட்டியது கிடையாது.

ஆனால் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் அக்கட தேசத்தில் ஒரு படத்தில் படு கிளாமராக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருடைய கிளாமர் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

ஆனால் அதெல்லாம் அந்த நடிகையின் ஆரம்ப காலகட்டங்களில் தான். தமிழ் ரசிகர்கள் அவரை குடும்பம் குத்து விளக்கு என்று நினைத்ததால் அதை அப்படியே மெயின்டெயின் செய்யவேண்டியதாகிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் அந்த நடிகைக்கு வெற்றிப்படமாக அமைந்தது அந்த சீக்கிர நடிகரின் படங்கள் தான். அவரது படங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் அமைவதால் கவர்ச்சிக்கு வாய்ப்பு இருக்காது.

இதனால் அப்படியே ஒரு சில காலம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த நடிகைக்கு தற்போது கோலிவுட்டில் சுத்தமாக வாய்ப்பே இல்லை. இதனால் தற்போது தன்னை சார்ந்த தயாரிப்பாளர்களுக்கு கவர்ச்சி காட்ட ரெடி என வைத்துள்ளாராம்.

அதுவும் கொஞ்ச நஞ்ச கவர்ச்சி இல்லையாம். எக்கச்சக்க கவர்ச்சினா கூட எக்ஸ்ட்ரா பேமெண்ட் கொடுத்தால் நடித்துக் கொடுக்கிறேன் என கூறியதால் தற்போது எட்டு மணி பிளைட் பிடித்து கிளம்பிவிட்டார்களாம் நம்ம தயாரிப்பாளர்கள்.

Trending News