விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் இரண்டாவது வின்னராக வெற்றி பெற்றுவர் தான் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் வீட்டில் சர்ச்சையான சில சம்பவங்களில் சிக்கிய பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பம் உருவாக்கியது.
ஆனாலும் தற்போது வரை ஒரு மாஸ் ஹீரோவாக வளம் வருகிறார் பாலாஜி. சமீபத்தில் Behindwoods, ‘Biggest Sensation On Reality Television’ என்ற விருதை பாலாஜி முருகதாஸுக்கு வழங்கியது.
அந்த பட்டத்தை தற்போது பாலாஜி முருகதாஸ் தனக்கு வேண்டாம் என திரும்பி கொடுத்து விட்டாராம். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களே ஷாக் கொடுத்து உள்ளார்.

இதற்கு என்ன தான் காரணம் என்று பார்த்தால், இவர் மேடையில் பேசிய வீடியோக்களை தற்போது வரை வெளியிடவில்லை இந்த காரணத்தினால் விருதை நான் திருப்பி கொடுக்கிறேன் என்பது போன்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் பேசிய வீடியோ வெளியிடாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் மேடையில் VJ-வை தவறாக பேசியது போல் தெரிகிறது. இதனால் தான் வீடியோவை வெளியிடவில்லை.

தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை அவமதிக்கப்பட்டதால் திருப்பி கொடுத்த சம்பவம் பிரபலங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.