தற்போது தமிழ் ரசிகர்கள் தியேட்டரில் போய் படம் பார்ப்பதை சுத்தமாக மறந்து விட்டனர் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒடிடி தளங்கள் தமிழ் ரசிகர்களை ஆக்கிரமித்துவிட்டன.
எவ்வளவு நாள் தான் பார்த்த படத்தையே பார்த்துக் கொண்டிருப்பது என தற்போது தமிழ் ரசிகர்களும் வெளிநாட்டுப் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவற்றை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
அதுமட்டுமில்லாமல் நல்ல நல்ல ஹாலிவுட் படங்களையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். இதுவே தமிழ் சினிமா விரைவில் அழிவதற்கான அறிகுறி. தியேட்டரில் வெளியாகும் படங்கள் தான் ஒரே மாதிரி இருக்கிறது என்று பார்த்தால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் அதே மாதிரிதான் இருக்கிறது.
இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்கள் புதிய புதிய ஹாலிவுட் வெப்சீரிஸ் மற்றும் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ஒடிடி தளங்கள் இல்லாத செல்போன்களே கிடையாது என்பது தான் உண்மை. தற்போது அவர்களையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரே நேரத்தில் சூப்பர் கதையம்சம் உள்ள 5 படங்களை வைத்து தமிழில் என்ட்ரி கொடுக்க உள்ளது சோனி லிவ் என்ற ஓடிடி நிறுவனம்.
சோனி நிறுவனம் எப்போதுமே சிறந்த படங்களையும் வெப்சீரிஸ்களையும் கொடுத்த தவறியதில்லை. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழில் புதிய முயற்சிகளை எடுக்க உள்ளதாம். இதனால் விரைவில் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்கிறது சினிமா வட்டாரம்.