தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படும் விக்ரமன் இயக்கிய படங்களில் அஜித், விஜய், விஜயகாந்த் என பலரும் நடித்தபோதும் ரஜினிகாந்த் தற்போது வரை நடிக்காதது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்தது.
குடும்ப பாங்கான திரைக்கதை அமைத்து அதை வெற்றிகரமாக கொடுப்பதில் வல்லவர் விக்ரமன். முதல் முதலில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான புது வசந்தம் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
நான்கு ஆண் நண்பர்கள் இருக்கும் ஒரே வீட்டில் ஒரு இளம் பெண் எப்படி கண்ணியத்துடன் இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டியிருந்த இந்த படம் நட்பிற்கு இலக்கணமாக அமைந்தது. அதன் பிறகு சில வெற்றி தோல்வி கொடுத்திருந்தாலும் பூவே உனக்காக திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று விஜய்க்கும் அவருடைய சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைந்து.
அதனைத் தொடர்ந்து சூரிய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப் போல, உன்னை நினைத்து என வரிசையாக வெற்றி பெற்றன. இப்படி தமிழ் சினிமாவை வேறொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்ற விக்ரமன் படத்தில் ரஜினி நடிக்காத காரணம் என்ன என்பது தெரியாமலேயே இருந்தது.
தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. விக்ரமன் படங்கள் பெரும்பாலும் ஹீரோக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும். அதில் ஹீரோவே சாதாரணமான ஆளாகத்தான் இருப்பார்.
ஆனால் ரஜினிகாந்த் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் ஒரு சண்டைக்காட்சிகள் கூட இல்லாத படத்தில் எப்படி நடிப்பது என்றும் மேலும் தன்னுடைய ரசிகர்கள் என்னுடைய சண்டை காட்சிகள் மற்றும் ஸ்டைலை பார்ப்பதற்காக மட்டுமே திரையரங்குகளுக்கு வருவார்கள், அவர்களை ஏமாற்ற முடியாது எனக்கூறி விக்ரமன் படங்களில் நடிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி கோலிவுட்டில் உலா வருகிறது.