கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலருக்கும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றிகள் அமையவில்லை. இதனால் முன்னணி நடிகர்கள் பலரும் இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் முன்னணி இயக்குனர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் தொடர்ந்து ஒரே மாதிரியான சலித்துப்போன கதைகளையே திரும்பத் திரும்ப எடுத்து வருகின்றனர் என்பதுதான்.
ஆனால் கமர்ஷியல் சினிமாவை மட்டுமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வேறு எந்த மாதிரி படங்களை கொடுப்பது எனவும் இயக்குனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் சின்ன நடிகர்களின் படங்கள் பெரிய வெற்றியை பெறுகின்றன. ஆனால் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் அவர்களைத் தவிர வேறு யாருக்காவது முக்கியத்துவம் கொடுத்து விட்டால் அந்த படம் ப்ளாப் ஆகிவிடுகிறது.
இதை சொன்னால் நம்ம பைத்தியக்காரன் என்கிறார்கள் முன்னணி இயக்குனர்கள். இதனால் தமிழ் சினிமாவை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது என மாஸ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தெலுங்கு சினிமாவுக்கு பலரும் படையெடுக்கின்றனர்.
அந்த வகையில் ஷங்கர், முருகதாஸ், லிங்குசாமி ஆகியோரும் அடுத்தடுத்து தொடர்ந்து தெலுங்கு படங்களை எடுக்க உள்ளனர். இவர்கள் மூவருக்குமே தமிழ் சினிமா இயக்குனர் வரிசையில் முக்கிய இடம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.