கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் இருந்த சின்ன சின்ன வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி மூலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் முக்கிய வங்கி ஒன்றின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வங்கி தான் சிவாஜிராவ் போசாலே சகாஹரி வங்கி. இந்த வங்கியில் போதுமான வருவாயும், மூலதனமும் இல்லாததால் இதன் உரிமத்தை ரத்து செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
மே 28-ஆம் தேதி நோட்டீஸ் கொடுத்து மே 31ஆம் தேதி இந்த வங்கியின் மொத்த செயல்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ஏகப்பட்ட வங்கிகள் இதுபோன்று உரிமத்தை இழந்துவருகின்றனர்.
மேலும் இந்த வங்கியும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வந்தது. ஆனால் வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949ன் பிரிவு 56 உடன் படித்த பிரிவு 11(1) மற்றும் பிரிவு 22(3) விதிகளுக்கு இணங்கவில்லை என தெரிவித்து ரத்து செய்துள்ளனர்.
தவிர பிரிவு 22(3)(3) (a), 22(3)(b), 22(3)(c), 22(3)(d) மற்றும் 22(3)(e) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செயல்படவும் மறுத்துவிட்டதாம். தற்போது இந்த வங்கியின் பயனாளர்களின் நிலை குறித்தும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள.
அதாவது மொத்த இழப்புகளையும் கொடுக்க முடியாது எனக்கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனாலும் 98% பயனாளர்களுக்கு Deposit Insurance and Credit Guarantee Corporation மூலம் தொகை கிடைக்கவும் வழிவகை செய்துள்ளார்கள்.