இன்று வரும் இசையமைப்பாளர்கள் அனைவரின் பாடல்களும் ஒரு கட்டத்திற்கு மேல் சலித்து விடுகிறது. ஆனால் இப்போது கேட்டாலும் புதிதாக இருக்கும் போல் பாடலை இசையமைத்தவர் தான் இளையராஜா.
அதனால்தான் ரசிகர்கள் அவரை இசைஞானி இளையராஜா எனக் கொண்டாடி வருகின்றனர். இப்போதும் மதிய நேரங்களில் பேருந்துகளிலும் சரி, எப்எம் ரேடியோக்களில் சரி நம்ம இளையராஜாவின் ஆதிக்கம்தான்.
இளையராஜா எப்போதுமே தான் இசையமைக்கும் படங்களுக்கு பாடல்களை கொடுக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ள மாட்டாராம். குறைந்தது மூன்று நாட்கள், அதிகபட்சம் ஐந்து நாட்கள் தான் எடுத்துக் கொள்வாராம்.
ஆனால் தன் வாழ்நாளில் இளையராஜா ஒரே ஒரு படத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 40 நாட்கள் பாடல் பதிவுகளை நடத்தினாராம். இத்தனைக்கும் அது ஒரு சூப்பர்ஹிட் மாஸ் படம்.
ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜயகாந்த் கூட்டணியில் உருவான திரைப்படம் ரமணா. இந்த படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த படத்தின் பாடல்களுக்கு தான் இளையராஜா 40 நாட்கள் பணியாற்றினார்.
அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி கஷ்டப்பட்டு நான் எந்த படத்திற்கும் இசை அமைக்கவில்லை இயக்குனர் முருகதாஸிடம் கூறினாராம் இளையராஜா. அப்போது முருகதாஸ் வளர்ந்து வரும் இயக்குனராக இருந்தார் என்பதும் குறிப்பிட வேண்டியவை.