தனுஷுடன் சண்டை வந்தது இதனால்தான்.. ஓப்பனாக சொன்ன ஜகமே தந்திரம் தயாரிப்பாளர்

ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது ஊர் அறிந்த விஷயம்தான்.

இதனால் ஆரம்பத்திலிருந்தே தனுஷ் ஜகமே தந்திரம் படத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தார். ஆனால் கடைசியாக ட்ரெய்லரை வெளியிட்டதன் மூலம் தன்னுடைய தரப்பு வாதம் என்ன என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் நல்ல நல்ல படங்களை கொடுக்கும் தயாரிப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த். ஆனால் கடைசியாக இவர் தயாரித்த படங்கள் தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியாகி வந்தன.

அந்த வகையில் இவரது தயாரிப்பில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் படமான ஜகமே தந்திரம் படமும் நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு விற்கப்பட்டு வருகின்ற ஜூன் 18-ம் தேதி நேரடியாக வெளியாக உள்ளது.

இதுகுறித்து முதன்முறையாக படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த், முதல் முறையாக தனுஷுக்கும் தனக்கும் என்ன பிரச்சினை என்பதை தெரிவித்துள்ளார். முன்னதாக தனுஷ் ஜகமே தந்திரம் படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என தீவிரமாக இருந்தார்.

ஆனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரித்துவிட்டதால் வட்டி கட்ட முடியாமல் தடுமாறிய விஷயம் எனக்குத் தான் தெரியும் எனவும், நெட்பிளிக்ஸ் நல்ல ஆபருடன் வந்ததால் விற்றுவிட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதையெல்லாம் கடந்து தற்போதும் ஜகமே தந்திரம் படம் அமெரிக்காவில் கூட பேசப்படுவது ஒரு தயாரிப்பாளராக தனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

jagame-thandhiram-cinemapettai
jagame-thandhiram-cinemapettai