ஒரு காலத்தில் ஏ ஆர் முருகதாஸ் படங்களில் நடிக்க நடிகர்கள் வரிசைகட்டி கொண்டிருந்த நாட்கள் போய் தற்போது நடிகர்களுக்காக காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏஆர் முருகதாசுக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் அவர்களுடைய கேரியர் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல உதவியாக இருந்தது முருகதாஸ் படங்கள் தான் என்றால் அது மிகையாகாது.
சர்கார், தர்பார் போன்ற படங்களில் சுமாரான விமர்சனங்களுக்குப் பிறகு அடுத்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என தளபதி 65 படத்தில் கமிட்டானார். ஆனால் முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடிக்கவில்லை.
இதன் காரணமாக முருகதாஸை ஒதுக்கிவிட்டு இளம் இயக்குனர் நெல்சனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இதனால் விஜய்க்கு எழுதிய கதையில் வேறு ஒரு முன்னணி நடிகரை வைத்து படமெடுக்கலாம் என பலருக்கும் போன் செய்து கொண்டிருக்கிறாராம்.
ஆனால் கதை கேட்கும் நடிகர்கள் விஜய் கதை வேண்டாம் எனவும், வேறு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று போனை கட் செய்து விடுகிறார்களாம். இதனால் மிகவும் மன வருத்தத்தில் உள்ளார் ஆர் முருகதாஸ்.
இதே கதையை வைத்து தெலுங்கு நடிகர் யாரையாவது வைத்த படம் இயக்கலாம் என தற்போது ஹைதராபாத்துக்கு பிளைட் டிக்கெட் போட்டு விட்டாராம் முருகதாஸ். அனேகமாக மகேஷ்பாபு மண்டையை கழுவுவார் என எதிர்பார்க்கலாம்.