தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் விமலும் ஒருவர். அதிலும் கிராம கதையில் நடித்த தமிழ் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. அந்த அளவிற்கு கிராமத்து நாயகனாகவே ரசிகர்களிடம் பிரபலம் அடைந்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் தான் சினிமாவின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடித்த வாகை சூட வா ,கலகலப்பு, மஞ்சப்பை மற்றும் தேசிங்குராஜா போன்ற படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனைபடைத்தன.
அதன்பிறகு இவர் சரியான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்யாததால் தமிழ் சினிமாவில் அதிகமான படங்களில் நடிக்க முடியாமல் போனார். இருந்தாலும் குறைந்த பட்ஜெட்டில் படங்கள் நடிப்பதால் சிறு சிறு தயாரிப்பாளர்கள் விமலை வைத்து படங்களை தயாரித்து வருகின்றனர்.
களவாணி படத்தில் நடந்தது போலவே நடிகர் விமல் அக்ஷயா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியே வந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் விமல் மனைவி மருத்துவர் என்பதால் 8 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
நடிகர் விமலுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது அந்த பெண் குழந்தையின் முதல் வருட பிறந்தநாள் விழாவிற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் விமலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் களவாணி மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களை போல காமெடி நிறைந்திருக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.