பொதுவாக வெற்றிமாறன் தான் சர்ச்சைக்குரிய நாவல்களை தேடிப்பிடித்து அதை திரைக்கதையாக மாற்றி சினிமாவில் படமாக எடுத்து வருவார். இதுவரை அவர் எடுத்த படங்கள் அனைத்துமே அந்த வகையைச் சார்ந்தவைதான்.
இருந்தாலும் திரைக்கதையில் சுவாரசியத்தை கூட்டி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வி கொடுக்காத இயக்குனர்களில் இவர்தான் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் 18ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் நேரடி இணைய தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் எடுக்க இருக்கும் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட நாவலை சார்ந்தது எனவும், அந்த நாவல் ஈழத்தமிழர்களைப் பற்றிய நாவல் என்பதும் அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பெரும்பாலும் திரைப்படமாக எடுத்தால் சர்ச்சை வர வாய்ப்பிருக்கிறது என வெப் சீரிஸாக எடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் கார்த்திக் சுப்புராஜ். எழுத்தாளர் அ முத்துலிங்கம் என்பவர் எழுதிய கடவுள் தொடங்கிய இடம் என்ற நூல்தான் அது.
இதற்கான காப்புரிமையை கார்த்திக் விலை கொடுத்து வாங்கியதாகவும், விரைவில் இதற்கான வேலைகளில் இறங்க உள்ளதாகவும் கூறுகின்றனர். ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தில் ஈழம் சார்ந்த சில வசனங்கள் இருக்கும். அதேபோல் ஜகமே தந்திரம் படத்திலும் அந்த வாடை அதிகமாகவே இருக்குமாம்.
![karthik-subbaraj-next-movie-novel](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/06/karthik-subbaraj-next-movie-novel.jpg)