சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சினிமா வாய்ப்பு ஆசைகாட்டி சிறுமியை சீரழித்த சீரியல் பிரபலம்

சினிமா பிரபலங்கள் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி சில சமயம் அத்துமீறுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இளம் நடிகர் ஒருவர் வசமாக சிக்கியுள்ளது தான் இன்றைய பரபரப்பு.

ஏற்கனவே சினிமாவின் மீது நல்ல பெயர் இல்லாத நேரத்தில் நடிகர் நடிகைகள் தொடர்ந்து தவறான விஷயங்களை ஈடுபட்ட தங்களுடைய பெயரை மேலும் எடுத்துக்கொள்வது சினிமாவின் மீதான மரியாதையை குறைத்துவிட்டது.

சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகர்களின் ஆட்டம் அதைவிட அதிகமாக இருக்கிறது. சினிமாவை விட சீரியலுக்கு எப்போதுமே மவுசு ஜாஸ்தி. இந்தியாவில் சீரியலுக்கு அடிமையாகாத தாய்மார்களே கிடையாது.

அந்த வகையில் டப்பிங் சீரியல்களுக்கும் நல்ல மவுசு உள்ளது. அப்படி நாகினி சீரியல் நம்ம ஊரில் செம ஓட்டம் ஓடியது. அதில் நடித்தவர் தான் பியரல் வி என்பவர். நாகினி சீரியல் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி சிறுமி ஒருவருக்கு ஆசை காட்டி அவரை தவறுக்கு பயன்படுத்திக் கொண்ட செய்தி அம்பலமாகி கைது செய்யப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக முகம் காட்ட அந்த சிறுமி தற்போது தைரியமாக வந்து அந்த நடிகரின் மீது புகார் கொடுக்க, விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

pearl v puri-cinemapettai
pearl v puri-cinemapettai
- Advertisement -

Trending News