வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

ஒரு நொடிக்கு 1000, ஒரு மாதத்திற்கு 1 கோடி.. மனைவியால் பலமடங்கு உயரும் சுந்தர் பிச்சை சொத்து!

மதுரையில் பிறந்து தற்போது உலகை கைக்குள் வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் உயர்பதவியில் இருப்பவர்தான் சுந்தர் பிச்சை. இவருடைய ஆண்டு வருமானம் மட்டுமே பல்லாயிரம் கோடிகளைத் தாண்டி உள்ளது.

இவரைப் பற்றி அனைவருக்குமே தெரியும். ஆனால் இவரது மனைவி அஞ்சலியை பற்றி பலருக்கும் தெரியாது. அவரும் சும்மா இல்லை, மாதத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு தகுதி பெற்றவர் தான்.

ஐஐடியில் படிக்கும் போது சுந்தர் பிச்சைக்கும் அவரது மனைவி அஞ்சலிக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அஞ்சலி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் சுந்தர் பிச்சை தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது.

அதன் காரணமாக மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அப்போது செல்போன் போன்றவை இல்லாத காலகட்டம். இருவரும் ஈமெயிலில் மட்டுமே காதலை வளர்த்து வந்துள்ளனர்.

அதன் பிறகு இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர். சுந்தர் பிச்சை ஒரு பக்கம் ஆயிரம் கோடிகளில் சம்பளம் வாங்கி வந்தால், இன்னொரு பக்கம் அவரது மனைவி அஞ்சலியும் அதற்கு சற்றும் குறைந்தவரல்ல.

மாதம் ஒரு கோடி சம்பளம் என வருடத்திற்கு 12 முதல் 15 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். இதனால் கடந்த சில வருடங்களில் மட்டும் சுந்தர் பிச்சை குடும்பத்தின் சராசரி வருமானம் 79 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் தற்போதைய சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு மட்டும் 5,900 கோடி என்கிறார்கள்.

sundar-pichai-anjali-cinemapettai-01
sundar-pichai-anjali-cinemapettai-01

Trending News