ஆரம்பத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த ஆர்யா இடையில் கொஞ்சம் சறுக்கல்களை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார். ஆனால் தற்போது மீண்டும் மகாமுனி படத்தின் மூலம் இழந்த தன் மார்க்கெட்டை மீட்டெடுத்துள்ளார்.
அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் மகாமுனி ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தின் புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான டெடி திரைப்படம் குழந்தைகளுக்கு பிடித்த படமாக அமைந்துவிட்டது. இப்படி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஆர்யா வெற்றி படங்களை தொடர்ந்து கொடுப்பதற்காக நல்ல நல்ல இயக்குனர்களை தேர்ந்தெடுத்து வருகிறாராம்.
அந்த வகையில் விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் விரைவில் நடிக்க உள்ளாராம்.
காமெடி கலந்த காதல் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக பல நடிகைகள் பேசப்பட்ட வருகின்றனர். ஆனால் யாருமே இன்னும் இறுதியாக வில்லையாம். மேலும் விஜய் சேதுபதிக்கு சூது கவ்வும் போல ஆர்யாவுக்கு இந்த படம் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
படம் வெளியாவதற்கு முன்னர் இந்த மாதிரி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதற்காக சில விஷயங்கள் வெளிவரும். ஆனால் இந்த கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக வித்தியாசமான படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.
