வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய்யும் வேண்டாம், அஜித்தும் வேண்டாம்.. முருகதாஸின் அடுத்த பட ஹீரோ இவர்தான், செம மாஸ்!

விஜய்யையும் அஜித்தையும் நம்பி காலத்தை ஓட்டுவதை விட சங்கர் ராஜமௌலி போல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லலாம் என முடிவெடுத்து முருகதாஸ் அடுத்த பாய்ச்சலை ஆரம்பித்துவிட்டார்.

முருகதாஸுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது போல. அவர் எடுக்கும் ஒவ்வொரு படங்களும் தோல்வியைத் தழுவி வருகிறது. தோல்வியை தழுவுவதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சில பஞ்சாயத்துகளையும் ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே கதை திருடன் பட்டம் கட்டியதால் அவரது மரியாதை குறைந்து கொண்டே செல்கிறது. மேலும் அவருடைய திறமையான உதவி இயக்குனர்கள் அனைவரும் தற்போது இயக்குனர் ஆகிவிட்டதால் சிறந்த திரைக்கதை அமைக்க முடியாமல் தடுமாறுகிறார்.

இருந்தாலும் தான் ஒரு பெரிய இயக்குனர் என்பதை நிரூபித்தாக வேண்டும் என்பதற்காக தற்போது மூன்று கதைகளை எழுதி வைத்துள்ளார். அதில் கன்னட நடிகர் யாஷை ஒரு கதையில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.

இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகும் என தெரிகிறது. கேஜிஎப் படங்களுக்கு பிறகு யாஷ் இந்தியாவே எதிர்பார்க்கும் நடிகராக மாறி விட்டதால் அவரை வைத்து நாமும் இந்திய அளவில் பெரிய வெற்றிப்படம் கொடுத்து மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமென முடிவு செய்துள்ளாராம்.

murugadoss-yash-movie
murugadoss-yash-movie

இதற்காக விரைவில் அவரை சந்தித்து கதை சொல்ல உள்ளதாக தெரிகிறது. விஜய், அஜித் போன்றோருக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் என்பதால் முருகதாஸ் படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

Trending News