செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கோவிஷீல்டு, கோவாக்சின் சிறந்த தடுப்பூசி எது தெரிஞ்சிக்கோங்க.? பல நாள் சந்தேகத்தை உறுதி செய்த ஆய்வு!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டு வரும் சூழ்நிலையில், இன்று பிரதமர் விரைவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் அதிக அளவில் பரவிய  கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசு கடும் முயற்சி எடுத்து 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு மருந்துகளைத் தவிர ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் வி மருந்து சிறப்பாக செயல்படுவதாகவும் விரைவில் அது தமிழ்நாட்டில் அனைத்து அப்பல்லோ மருத்துவமனைகளிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து கிட்டத்தட்ட 52 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது, RS.995 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு இடையே எது சிறந்தது அல்லது எதிர்ப்பு சக்தியை தரும் என்ற ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கோவாக்சின் மருந்து கொரோனா தடுப்பதற்கு அதிகமாக உதவுதம். இரண்டுமே கொரோனா தடுப்பதற்கு சிறப்பாக செயல்படுவதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாட்கள் மக்களுக்கு இருந்த சந்தேகம் தற்போது தெளிவாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவது சிலருக்கு பயம் இருப்பதால், அதற்கான விழிப்புணர்வு வீடியோக்களை சினிமா பிரபலங்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Trending News