அச்சு அசல் தளபதி போல் புகைப்படம் வெளியிட்ட உள்ள முகன் ராவ்.. மில்லியன் லைக்ஸ் குவியுது!

பிக் பாஸ் 3 சீசனின் டைட்டில் வின்னராக முகன் ராவ் வெற்றி பெற்று மலேசியாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டவர்.

பாடுவதில் ஆர்வம் கொண்ட முகன் பல ஆல்பங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெற்றி, வேலன் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியின் மூலம் அடையாளம் பெற்ற முகன் ராவ் தற்போது கோலிவுட்டில் கால்பதித்து இருப்பது மற்றும் வெள்ளித்திரையில் இவருக்கான வருகை எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர், முக்கியமாக ரசிகைகள் அதிகமாக உள்ளனர். தற்போது தளபதி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் போது துப்பாக்கி படத்தில் தளபதி விஜய் கொடுத்த அதே போஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். கோலிவுட்டில் கண்டிப்பாக ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mugan-rao
mugan-rao

சத்தியமா நான் சொல்லுறேன் டி என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது வரை ரசிகர்கள் அதனை முனுமுனுத்து தான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.