தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் பரபரவென முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த அஞ்சலி திடீரென தன்னுடைய சொந்தப் பிரச்சினை காரணமாக சினிமாவிலிருந்து விலகினார்.
அதோடு சரி. அவருக்கு இருந்த மார்க்கெட்டும் குறைந்து விட்டது. போதாக்குறைக்கு சமூக வலைதளங்களில் அவரது பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி விட்டது.
இருந்தாலும் தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு தற்போது சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அஞ்சலி நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருவது இல்லையாம். இது குறித்து நண்பர் வட்டாரங்களில் கேட்டால், தனக்கென ஏற்ற கதாபாத்திரம் இருந்தால் கண்டிப்பாக இயக்குனர்கள் என்னை தேடி வருவார்கள் என கூறி கொண்டிருக்கிறாராம்.
ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே வரவில்லை என்பதுதான் சோகமான விஷயம். போதாக்குறைக்கு உடல் எடையை வேறு முற்றிலும் குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார் அஞ்சலி.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரசிகர்கள் அஞ்சலியை ரசித்தது எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது தான். அந்த படத்தில் அஞ்சலி செம அழகாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.