கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு வருடங்களில் மொத்த உலகத்தையும் தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிட்டது. எந்த ஒரு சூழலிலும் சாதாரணமாக நடந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் இன்னமும் தடுப்பூசி பற்றிய பயம் பலருக்கும் உள்ளது. சமீபத்தில் கூட மிகப் பெரிய பிரபலங்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு அடுத்த சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவங்களும் நிறைய நடைபெற்றுள்ளது.
இதன் காரணமாகவே கொரானா பாதிப்பு இல்லாதோர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள யோசித்து வருகின்றனர். இந்நிலையில் இளைஞர்களை கவர்வதற்காக அமெரிக்க அரசு ஒரு அதிரடி சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒருநாள் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு கஞ்சா பொட்டலம் இலவசமாக வழங்குவதாக கூறி உள்ளனர். இதை கேள்விப்பட்ட அந்நாட்டு இளைஞர்கள் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவமனைகளில் அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது. நம்ம ஊரில் ஒயின்ஷாப் இருப்பதைப்போல அந்த ஊரில் கஞ்சா கடைகள் பல இருப்பதும் குறிப்பிடத்தக்கது.